முரட்டு கூட்டணியா இருக்கே…
இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான ஜேஎஸ் டபிள்யூ மற்றும் போக்ஸ்வாகன் நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து புதிய மின்சார வாகனங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அமர்ந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் ஒடிஷா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதாவது கட்டாக் மற்றும் பாரதீப் பகுதிகளில் மட்டும் பேட்டரி உற்பத்தி ஆலை தொடங்க 40,000 கோடி ரூபாய் இதற்காக அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் போக்ஸ்வாகன் நிறுவனம் தனது இந்திய வணிகத்தின் ஒரு பங்கை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திடம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. புதிய வணிக வாய்ப்புகள் , உலகளாவிய புதிய வேலைவாய்ப்புகளை தான் தருவதாகவும்,ஊகங்களுக்கு பதில் தர முடியாது என்றும் போக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எம்ஜி மோட்டார் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தைக்குள்ளாகவே இந்திய சந்தையில் 35 விழுக்காடு பங்குகளை ஜேஎஸ் டபிள்யூ திட்டமிடுகிறது. கடந்தாண்டு 8000கோடி ரூபாய் முதலீட்டில் 2800கோடி ரூபாய் அளவுக்கு ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம்அளித்திருக்கிறது. ஏற்கனவே சீன நிறுவனமான சைக் நிறுவனத்துடன் ஜேஎஸ் டபிள்யூ இணைந்திருக்கும் நிலையில் அதன் உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் சந்தையை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை ஆற்றலில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதே இந்த கூட்டு நிறுவனங்களின் பிரதான் நோக்கமாக இருக்கிறது.