ஊபருடன் கை கோர்த்த அதானி..
மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் வைத்துள்ள அதானி, ஊபேர் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அதானியும் ஊபர் அதிகாரியும் சந்தித்தது கொண்டனர். அதானியின் அதானி ஒன் என்ற சூப்பர் ஆப்பின் ஒரு பகுதியாக இந்த இணைப்பு சாத்தியமாகி உள்ளது. மின்சார கார்களை இதில் பயன்படுத்தப் பட உள்ளன. அதானி ஒன் என்ற சூப்பர் ஆப் மூலம், விமானம், சுற்றுலா புக்கிங் செய்து கொள்ளலாம், புதிய ஒப்ப்பந்த அடிப்படையில் மின்சார பஸ், டிரக் உள்ளிட்ட வாகனங்கள் வாடகைக்கு விடும் சேவை வழங்கப்பட உள்ளது.உலகம் முழுவதும், தற்போது வாடகை கார்கள் சேவை வழங்கும், ஊபர் நிறுவனம், 2040ஆம் ஆண்டுக்குள் அனைத்து கார்களையும் மின்சார கார்களாக மாற்றும் திட்டத்தில் அடுத்த கட்டமாக அதானி யுடன் இருக்கும் புதிய ஒப்பந்தம் பார்க்கப் படுகிறது. 3600மின்சார பஸ்களை இயக்கும் ஒப்பந்தம் உபேர் உடன் , அதானி குழுமம் செய்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஊபரில் 300கோடி பயணங்கள் செய்யப்பட்டு உள்ளன.8லட்சம் இந்தியர்கள் , ஊபர் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர்