80பில்லியன் டாலர் புஸ்க்..
இந்தியாவில் 80பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட சிறிய நிறுவன பங்குகள் சரிந்து இருப்பது ஆபத்தான ஒன்று என்று நிபுணர்கள் கணித்து எச்சரிக்கின்றனர்.இந்திய சந்தைகள் சரியும் இதே நேரம் தைவான் மற்றும் கொரியா பங்குகளை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக, குறிப்பிட்ட அந்த நாடுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் துறைகளில் கூடுதல் முதலீடுகள் கிடைத்தது வருகின்றன. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள கரக்ஷன் ஒரு நாளில் செய்ய முடியாது என்றும் வரும் நாட்களில் படிப்படியாக சந்தையில் சரிவு காணப்படும் என்பதும் விவரம் அறிந்தொரின் கருத்தாக உள்ளது.சிறிய பங்குகளில் இருந்து மக்கள் வெளியேறி தரமாக பங்குகளை தெரிவு செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். செபியின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.