உயர்ந்து முடிந்த சந்தைகள்
ஆகஸ்ட் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 378 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 802 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி126 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 698 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. SBI Life Insurance, HDFC Life, Bajaj Finserv, Shriram Finance,IndusInd Bank, உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. ONGC, Bharti Airtel, Adani Enterprises, Cipla, Apollo Hospitals.உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. FMCG பங்குகளை தவிர்த்து மற்ற துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன. சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், உலோகம், வங்கி, ஆற்றல்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை உயர்ந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது. செவ்வாய்கிழமை ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 6 ஆயிரத்து 660 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் உயர்ந்து 92 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 92ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.