எவ்வளவு உயர்ந்தாலும் தீராத தங்க மோகம்..
உலகிலேயே இரண்டாவது அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. இந்தியாவிற்கு மட்டும் வெளிநாடுகலில் இருந்து 140 டன்அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் அதாவது 3மடங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது பண்டிகை நேரம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் என்பதால் தங்கம் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அண்மையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 15-ல் இருந்து 6 %ஆக குறைக்கப்பட்டதுதான் தங்கம் இறக்குமதிக்கு முக்கிய காரணமாகும்.
அக்டோபர் கடைசியில் தீபாவளி, நவம்பர் டிசம்பர், ஜனவரியில் திருமண நாட்களும் வருவதால் தங்கம் வாங்க ஆர்வம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் மொத்த தங்க தேவை என்பது தற்போதே 750 முதல் 850 டன்னாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்கத்தை தொட்டுப்பார்த்து கடைக்காரர் உடன் தகராறு செய்து பின்னர் தங்கம் வாங்கும் மக்களின் மன நிலை மொத்தமாக மாறியுள்ளதாகவும், காகித வடிவில் தங்கத்தை வாங்கவும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருவித புது அறிமுதம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்று தங்க நகைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்