சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்..
அக்டோபர் 11 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 81,381 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.20 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை 24,964 புள்ளிகளில் முடித்தன. Trent, Hindalco Industries, HCL Technologies, Tech Mahindra,ONGC. உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வில் முடிந்தன. M&M, TCS, ICICI Bank, Cipla and Power Grid Corp, உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல்,வங்கி, ஆற்றல், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அரைவிழுக்காடு குறைந்து முடிந்தது. தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்துத்துறை மற்றும் ஊடகத்துறை பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு வரை உயர்வை சந்தித்தன. Usha Martin, JM Financial, Mankind Pharma, Ipca Labs, MCX India, Divis Labs, Just Dial, Page Industries, Gujarat Alkalies, Glenmark Pharma, CG Power, HCL Technologies, Dixon Technologies, Gujarat Fluorochemicals, Century Plyboard, Symphony, Hitachi Energy, உள்ளிட்ட 200க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் சவரனுக்கு 560 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் விலை உயர்ந்து 7ஆயிரத்து95 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 102 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 2ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்