22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டன-எஸ்பிஐ
தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியினருக்கு வழங்கும் வகையில் அண்மையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோதம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பத்திரம் வாங்கியவர்கள் யார், எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் சென்றுள்ளன என்ற விவரங்களை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதில் 2019 ஏப்ரல் 1 முதல் 11 அதே ஆண்டு அதே மாதம் 11 ஆம் தேதி வரை 3346 பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், ஏப்ரல் 12 2019 முதல் 15 பிப்ரவரி 2024 வரை மொத்தம் 18,871 பத்திரங்கள் பொதுமக்களால் வாங்கப்பட்டன என்றும், மொத்தம் வாங்கிய பத்திரங்களில் 20,421 பத்திரங்கள் பணமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தரவுகளை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடமும் தெரிவித்துள்ளது. தரவுகளை தனி கவரிலும், அதற்கு உண்டான பாஸ்வேர்டுகளை தனி கவர்களிலும் அனுப்பி உள்ளது. இந்தியாவில் பொதுத்தேர்தல் வர உள்ள நிலையில் கடந்த 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்றும் சாட்டையை சுழற்றி இருந்தது. யார் வாங்கினார்கள் என்ற விவரத்தை உடனியாக வெளியிடவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவிப்பை ஆணையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.