இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவார்களா??
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைந்த அளவாகவே இருப்பதாக பல நாடுகளிலும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்ந்தாலும் இன்னும் நடுத்தர வருவாய் உள்ள நாடாகவே இந்தியா உள்ளது. தனிநபர் வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் குறித்து உலக வங்கி அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அது 40க்கும் மேற்பட்ட நாடுகள் எவ்வாறு குறைந்த வருவாயிலிருந்து அதிக தனி நபர் வருவாயை ஈட்டும் நாடுகளாக மாறியது என்பது குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் தனிநபர் வருவாயானது இந்தியாவின் வருவாயை விட மிகவும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்கள் 40 ஆண்டுகள் பெற்ற வளர்ச்சியை சில நாடுகள் சில வருடங்களிலேயே எட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முதலீடுகளை மட்டுமே இந்தியா போன்ற நாடுகள் நம்பி இருக்கும் சூழல் உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தென்கொரியாவில் கடந்த 1970-80களில் தனிநபர் வருவாய் 1300 அமெரிக்க டாலர்களாக இருந்த போது தொழில்துறையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் எடுத்தது. இதன் காரணமாக தனி நபர் வருவாயானது 33,000 அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் நூடுல்ஸ் விற்று வந்த சாம்சங் நிறுவனம், பிற்காலத்தில் மக்களின் தேவையை புரிந்து கொண்டு தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போனாக சாம்சங் செல்போன்கள் உள்ளன. ஆராய்ச்சி சார்ந்த துறைகளுக்கும் சாம்சங் நிறுவனம் அதிக தொகையை முதலீடாக செய்து வருகிறது இதன் காரணமாக அந்நிறுவனம் வெற்றிகரமாக உள்ளது. இந்தியாவில் நடுத்தர நிறுவனங்கள் குறைவான வளர்ச்சியே எட்டும் என்று கூறும் நிபுணர்கள் நீண்ட கால மெதுவான வளர்ச்சி மட்டுமே காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவை விட பல மடங்கு வளர்ச்சியானது அதிகரிக்கும் என்றும் ஆனால் அதன் வேகம் குறையும் என்றும் கூறியுள்ளனர். இந்தியர்களின் பெரும்பாலான வயது முதிர்வு அதிகரிக்கும் காலத்திற்கு முன்பாகவே வளர்ந்த நாடாக உயிர்வார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தனிநபர் வருவாயை அதிகரிக்க தொழிலாளர்கள் மத்தியிலும் தொழில்துறையிலும் பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இந்தியர்கள் தங்கள் வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.