வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பும் இந்தியர்கள்..
எச் எஸ் பிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 78 விழுக்காடு மக்கள் தங்கள் பிள்ளைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சென்று தங்கள் பிள்ளைகள் படிக்க விரும்புவோரின் விகிதம் மட்டும் 64%ஆக உள்ளது. 1456இந்தியர்களிடம் இது தொடர்பாக hsbC நிறுவனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 40 %இந்திய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுப் படிப்புக்கு லோன் எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அதே நேரம் 51%மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெற விரும்புகிறார்கள். 27%மக்கள் தங்கள் சொத்துகளை விற்றாவது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர். படிப்புக்கு ஆகும் செலவைவிட உடல்நலம் சார்ந்தும் வெளிநாடுகளில் அதிகம் செலவு செய்ய இருக்கிறது. தங்கும் செலவு, விலைவாசி உயர்வு, மருத்துவ செலவு, போதுமான சேமிப்பு இல்லாதது ஆகிய 5 பிரிச்சனைகள் பொதுமக்களை பெரிதும் கவலையடையச் செய்கின்றன.
நிலைமை இப்படி இருக்கையில், இந்தியர்களில் பெரும்பாலானோர் அதிகளவில் ஏற்கனவே முதலீடுகளை செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 60 வயதுக்கு பிறகும் வேலை செய்ய 60% மக்கள் விரும்புவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 40விழுக்காடுக்கும் அதிகமானோர் தங்கள் மரணத்துக்கு பிறகு தங்கள் சொத்துகளை பிள்ளைகளுக்கு மாற்ற விரும்புகின்றனர். 37%பேர் தாங்கள் வாழும்போதே தங்கள் வாரிசுகளுக்கு பணத்தையும், சொத்துகளையும் தர விரும்புகின்றனர்.