இந்த பொருட்கள் விலை உயர்கிறது தெரிஞ்சிக்கங்க..
மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலை இந்தாண்டு உயரப்போகிறது. அதுவும் லேசாக இல்லை வலுவாக உயரப்போகிறது. குறிப்பாக 2 முதல் 4 விழுக்காடு வரை இந்த பொருட்களின் விலைகள் உயரப்போகிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் விலைவாசியின் காரணமாக இந்த விலையேற்றம் தவிர்க்க முடியவில்லை என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன கோத்ரேஜ், டாபர்,இமாமி ஆகிய நிறுவனங்கள் இதே அளவுக்கு விலைகளை உயர்த்த இருக்கிறது. டாபர் நிறுவனம் உணவுப் பொருட்கள் விலை 2.5 விழுக்காடு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இமாமி நிறுவனம் இதே வகையில் 3 விழுக்காடு உயர்த்த திட்டமிட்டுள்ளது. பருப்பு மற்றும் நறுமன பொருட்கள் விலையுயர்வு இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது. இது கவலை அளிப்பதாக அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். தேனின் விலையும் போட்டி போட்டு நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. வாசனை பொருட்களில் விலையும் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் காலாண்டுகளில் படிப்படியாக விலை உயரும் சூழல் காணப்படுகிறது. நீண்டகால சராசரி 4 முதல் 5 விழுக்காடு வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சரிந்திருந்த சில உணவுப்பொருட்கள் விலை காரணமாக வியாபாரம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது விலை உயர்த்தப்படும் பட்சத்தில் மக்களின் வாங்கும் திறன் மாறுபடும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். சமையல் எண்ணெயில் மட்டும் விலை ஏற்ற இறக்கம் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது.