அழகாகும் நொய்டா..
டெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம் பெற இருக்கிறது. அதாவது யமுனா அதிவிரைவு தொழில் வழித்தட அமைப்பான YEIDA இந்த புதிய கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. செக்டார் 5 ஏ என்ற பகுதியில் மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலைகள் அமைய இருக்கிறது. இந்த நகரத்துக்கு ஜப்பானிய நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 395 ஹெக்டேர் நிலத்தில் இந்த நகரம் அமைய இருக்கிறது. இதேபோல் செக்டார் 4ஏ பகுதியில் கொரிய நகரம் அமைய இருக்கிறது. இதன் அளவு 365 ஹெக்டேர் அளவு கொண்டதாக இருக்கிறது. நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நகரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப் தயாரிப்பு இந்த நகரங்களின் முக்கிய உற்பத்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரைக்கடத்தி எனப்படும் செமி கண்டக்டர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கேமிராக்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த நகரங்களின் அருகிலேயே தொழிலாளர்கள் தங்குவதற்குசிறிய ரக வீடுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள்,ஜப்பானிய மற்றும் கொரிய மக்களுக்காகவே தயாராகிறதாம். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் வந்தும் ஆய்வை நடத்தியுள்ளன. இதற்கான மண் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பகுதியில் 70 விழுக்காடு கோர் நிறுவனங்கள், 13 விழுக்காடு வணிக பயன்பாட்டு பொருட்கள் மற்றும் 10 விழுக்காடு அளவுக்கு மக்கள் குடியிருக்கவும், 5 விழுக்காடு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களின் கூட்டு மதிப்பு 2544 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களை அமைக்க வட்டியில்லாமல் பாதி தொகை கடனாக வழங்க மாநில அரசிடம் கட்டுமான ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இரண்டு தவணைகளாக 3,300 கோடி ரூபாய் இந்த திட்டப்பணிகளுக்காக உத்தரபிரதேச மாநில அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.