தங்கம் விலை உயர்வு ஆனால் தேவை சரிவு…
அமெரிக்க வாடிக்கையாளர் பணவீக்க தகவல்கள் வெளியான நிலையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் மீது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக இஸ்ரேல் ஹமாஸ் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ, கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதேதான் தற்போதும் நடந்துள்ளது.
பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் இப்போதே 80 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் ஒரு பக்கம் உயர்ந்து வரும் வேளையில், அமெரிக்க பணவீக்க தரவுகள் 0.30%டிசம்பரில் உயர்ந்துள்ளது. இத்தனை சவால்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரம் முதலீட்டு தங்கத்தின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. தங்கத்தின் மீதான etfபங்குகள் தொடர்ந்து 7 ஆவது நாளாக குறைந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாகும். அமெரிக்காவின் தொழிற்சாலை உற்பத்தி, வீட்டுக்கடன் தரவுகளும், ஐரோப்பியா, ஜெர்மனியின் உள்நாட்டு உற்பத்தி, பணவீக்க தரவுகள் மற்றும் பிரிட்டனின் வேலைவாய்ப்புத்தரவுகளும், சீனாவின் 4ஆவது காலாண்டு உள்நாட்டு உற்பத்தி தரவுகளும், ஜப்பானின் டிசம்பர் மாத பணவீக்க தகவல்களும் உலகளவில் முக்கிய கவனம் பெற்றுள்ளன. உலகின் பெரிய பிரச்னைகள் வரும்போது அந்த நேரத்தில் தங்கம் கைகொடுக்கிறது. அதே நேரம் எப்படி வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை தரவுகள் மிகமோசமான அளவில் இருக்கவும் வாய்ப்புள்ளதால் தங்கத்தின் மீதான மதிப்பு உயர அதிக வாய்ப்பு உள்ளது. 2040 டாலர்கள் வரை தங்கத்தின் மீதான ஆதரவு விலை இருக்கலாம் என்றும், 2100 டாலர்கள் வரை கூட எகிற வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தங்கம் கைகொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.