வாராக்கடனை தள்ளிவிடும் எச்டிஎப்சி..

நாட்டின் பெரிய கடன் வழங்கும் தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎப்சி வங்கி, தனது வாராக்கடன்களில் இரண்டு பிரிவை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் அளவு மட்டும் ஆயிரத்து 28 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்விஸ் சேலஞ்ச் ஆக்ஷன் எனப்படும் ஏலத்தின் மூலம் இந்த கடன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அடகு கடன், வணிக வாகனம் மற்றும் விவசாய கடன்கள் மட்டும் 478 கோடி ரூபாய் என்றும், அதில் 329 கோடி ரூபாய் என்பது வீடடுக்கடன் கடன் மற்றும் அடகு கடன் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் 3232 வாகனக் கடன்கள், 2074 விவசாயக் கடன்களும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிறு குறு நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் 550 கோடி ரூபாயும் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கியின் வராக்கடன் விகிதம் 1.4%ஆக டிசம்பர் மாதத்தில் இருந்தது. சில்லறை பிரிவில் நிகர வாராக்கடன் விகிதம் 0.08%ஆக உள்ளது. வணிக மற்றும் கிராம வங்கி பிரிவில் வாராக்கடன் விகிதம் 2%ஆக உள்ளது. விவசாயம் அல்லாத வணிக மற்றும் கிராம பிரிவு கடன்கள் விகிதம் 1.3%ஆக தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.