திவாலாகிறது ஹீரோ எலெக்ட்ரிக்..

இந்தியாவில் முதல் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்திய பெருமை மிகு நிறுவனமான ஹீரோ தற்போது திவாலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்பாக திவால் விதிகளில் முறையிடும் அமைப்பிடம் ஹீரோ நிறுவனம் மனு அளித்துள்ளது. தங்கள் நிறுவனத்தை வாங்க விரும்புவோர் வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 301 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அந்தநிறுவனம் கூறியுள்ளது. 301 கோடி ரூபாய் இழப்பில் பரோடா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் பேங்க், ஐடிஎப்சி ஆகிய நிறுவனங்கள் அளித்த கடன் மட்டும் 82 கோடி ரூபாயாகும். 566 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு கிடைக்க வில்லை என்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 நிதியாண்டில் மட்டும் 1லட்சம் மின்சார பைக்குகளை அந்நிறுவனம் விற்றது. அதன் பிறகு கடும் சரிவை ஹீரோ நிறுவனம் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 பைக்குகளை மட்டுமே அந்நிறுவனம் விற்றுள்ளது. 2024 கணக்கின்படி, மொத்த மின்சார பைக்குகளின் எண்ணிக்கை 6.1 விழுக்காடாகவே இருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 1000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களை ஹீரோ நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த முதலீடும் பெரியளவில் கைகொடுக்காமல் போய்விட்டது. மத்திய அரசு தங்களுக்கு 566 கோடி ரூபாய் மானியம் உள்ளிட்ட சலுகைகளை தர வேண்டியிருப்பதாக ஹீரோ நிறுவனம் கூறியுள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு சார்பில் எந்தவித முன்னேற்றமும் அளிக்கப்படவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வரும் மே 13 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.