இந்த சீனப் பொருட்களுக்கு மிகப்பெரிய வரி..
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு மிகப்பெரிய வரியை விதித்து இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கண்ணாடி, செல்லோ டேப் உள்ளிட்டவற்றை சீனாவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய இயலாது. உள்ளூர் வணிகர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஐசோ புரொபைல் ஆல்கஹால், சல்பர் பிளாக், தெர்மோ பிளாஸ்டிக் பாலி யுரேத்தேன் கண்ணாடி உள்ளிட்ட 5 பொருட்கள் இறக்குமதி செய்யக்கூடாது. மேலே சொன்ன பொருட்கள் ஒரு டன்னின் விலை 82 டாலர்களாக இருக்கும் நிலையில் அதற்கு வரியாக 217 டாலர் விதிக்கப்பட்டுள்ளது. சல்பர் பிளாக் என்ற பொருள் ஆடைகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுகிறது. தெர்மோபிளாஸ்டிக் பாலியுரேத்தேன் என்ற பொருள் மின்சாதன பொருட்களில் பயன்படுகிறது. அதற்கும் கணிசமான தொகை வரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லோ டேப் எனப்படும் பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படும் டேப்கள் 60 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு டன் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு வரியாக 234 டாலர்கள் விதிக்கப்பட்டுள்ளது.
சீன தயாரிப்புகளால் உள்ளூர் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கைகளை மத்திய அரசின் கீழ் இயங்கும் DGTR அமைப்பு எடுத்துள்ளது.