புயல் அடித்தாலும் இந்தியா ஒரு பாலைவனச் சோலை தான்!!!!
இந்திய பொருளாதாரம் உலகளவில் குறிப்பிடத்தகுந்த அளவில் நிலை பெற்றுள்ளது, இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தெளவான திட்டமிடல்,அனைத்து துறை வசதிகள்
இந்திய பொருளாதாரத்தை வளர்க்க உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் இந்தியா தற்போது நிலையான நாடாக உள்ளதாகவும்,முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதாகவும் தெரிவித்தார். பெங்களூருவில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியாவுக்கு வருங்காலங்களில் அதிக சவால்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், அவை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை என்று தெரிவித்தார். மற்ற நாடுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மனித ஆற்றல் உழைப்பை செலுத்தினால்தான் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார். இந்தியாவின் பசுமை ஆற்றல் கொள்கை உலகின் பலநாடுகளை ஈர்த்து வருவதாகவும்,அதிக முதலீடுகளை பெற்று வருவதாகவும் கூறினார்.