இந்தியாசிமெண்ட்ஸ் பங்குகள் விலை வீழ்ச்சி:காரணம் என்ன??
தமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ஜாம்பவான் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் தனது முக்கியமில்லாத ஸ்பிரிங்கவே மைன்ஸ் என்ற ஆலையை ஜெஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு 476.87கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.கடன்களை சமாளிக்க இந்த நடவடிக்கையை இந்தியா சிமெண்ட்ஸ் முன்னெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் 27ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள இந்தியாசிமெண்ட்ஸ் நிறுவனம் வரும் நாட்களில் இதையும் விற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
373 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீதமுள்ள சொத்துகளில் சிலவற்றை வரும் டிசம்பருக்குள் விற்க முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக பல சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்பதால் மேலும் கூட பங்குகளின் விலை சரிய அதிக வாய்ப்புள்ளதாக சில முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் கணித்துள்ளன.