ஆய்வுநடத்த ஆணையிட்ட இண்டஸ்இன்ட் வங்கி..

இண்டஸ் இன்ட் வங்கி தனது நிறுவனத்தில் ஆய்வு நடத்த கிரான்ட் தார்ன்டன் என்ற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனம், கிரான்ட் தார்ன்டன் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் 5 ஆவது பெரிய தனியார் வங்கியாக இருக்கும் இந்த வங்கியின் பேலன்ஸ் ஷீட் என்பது 63 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டது. கடந்த மார்ச் 10 ஆம் தேதியில் இருந்து இதுவரை 23.4விழுக்காடு பங்குகள் விலை சரிந்துள்ளன. அதிக மதிப்பு காரணமாக இந்த சரிவு நேரிட்டதாக கூறப்படுகிறது. 175 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இண்டஸ் இன்ட் வங்கி சிறந்த மூலதனம் கொண்ட வங்கி என்று ரிசர்வ் வங்கியே கூறியுள்ள நிலையிலும், சரிவு ஏற்பட்டது எப்படி என்று விசாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதானமான விசாரணையை நடத்தவும்,சட்டவிரோத பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்திருக்கிறதா என்று பார்க்கவும் வெளியில் இருந்து ஒரு நிறுவனத்தை நாடியிருக்கிறது.
திடீரென நிறுவன பங்குகள் சரிய காரணமானவர்கள் யார் என்பதை முதலில் வெளியில் இருந்து ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடிக்கும்.
முறைகேடுகள் தொடர்பான முகாந்திரம் இருப்பதாலும், மாற்று தலைமைக்கான ஆட்கள் கிடைத்து விட்டதாலும், இண்டஸ் இன்ட் வங்கியின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி மற்றும் அவருக்கு துணையாக உள்ள அடுத்த நிலை அதிகாரி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த வாரத்தில் கேட்டுக்கொண்டது. எனினும் தங்கள் நிறுவன அதிகாரிகள் மீதான புகார்களை இண்டஸ் இன்ட் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.