இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சு பா!!!!
இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 11ம் தேதி வரை 1புள்ளி 3 % உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாகும் அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் மிக்குறைவாக சரிந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் அதிரடி நடவடிக்கையால் அந்நாட்டு பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த வட்டி விகிதத்தை ரிசர்வ் அறிவிக்காமல் தள்ளிப்போட்டுள்ளது. இதன் காரணமாக பிற நாட்டு பங்குச்சந்தைகளும் பலன் அடைந்துள்ளன. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80.69 ரூபாயாக சரிந்தது, கடந்த டிசம்பர் 2018 -ல்தான் இத்தகைய அளவில் சாதகமாக இருந்தது அதற்கு பிறகு அமெரிக்க டாலர் வீழ்ந்து இந்திய ரூபாய் தற்போதுதான் நிலைபெற்றுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வின் முயற்சிகளால் அந்நாட்டில் பணவீக்கம் 7.9-ல் இருந்த 7.4 ஆக வீழ்ந்தது அமெரிக்காவின் முயற்சியால் வலுவாக இருந்த டாலர் சற்றே ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் அது ஆசிய பங்குச்சந்தைகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு அண்மையில் 2 விழுக்காடு அதிகரித்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1.3 விழுக்காடு குறைந்துள்ளது இந்திய சந்தைகளில் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.