22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

லேசான உயர்வில் முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், புதன்கிழமை லேசான ஏற்றம் கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து, 80ஆயிரத்து234 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 276 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. தங்கள் மீது லஞ்சப்புகார்கள் இல்லை என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தெளிவுபடுத்தியதை அடுத்து 12 %வரை அதானி நிறுவன பங்குகள் உயர்ந்தன. என்டிபிசி நிறுவன பங்குகளும் 13% வரை உயர்ந்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரிதாக சரிந்தன. வங்கி மற்றும் ஆட்டோமொபைல், ஆற்றல் துறை பங்குகள் சந்தையின் ஏற்றத்துக்கு உதவின. மருந்து, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் கணிசமாக வீழ்ந்தன. புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7105 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் 98 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 98 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *