கடந்த 5 ஆண்டுகளில் சமநிலையில் முடிந்த பரஸ்பர நிதி..

இந்தியாவில் பரஸ்பர நிதித்துறை கார்பரேட் பாண்டுகள் தொடர்பான கையிருப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக சமநிலையிலேயே முடிந்ததாக பிசினஸ் ஸ்டான்டர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெப்ட் ஃபண்ட் என்ற வகையில் 6.73 லட்சம் கோடி என்ற அளவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி நிர்வகிக்கப்பட்டது. அதே நேரம் அந்த சொத்துகளின் மதிப்பு தற்போது 9 விழுக்காடு உயர்ந்து 7.3 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதே நேரத்தில் பரஸ்பர நிதி சங்கமான ஆம்பி(AMFI)அண்மையில் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாக கூறியுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்துகள் என்பது பாரத் பாண்ட் என்ற வகையிலான ஈடிஎஃப்ஐ ஒரு அங்கமாக கொண்டிருக்கும்.அதே நேரம் நிர்வகிக்கும் சொத்துகளில் ரொக்கப்பணம், கிளிட் ஃபண்ட்ஸ் ஆகியவை நிர்வகிக்கப்படும் சொத்துகளான AUM-ல் வராது. இது பற்றி செபி அமைப்பின் உறுப்பினரான ஆனந்த் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கேபிடல் முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக கூறியுள்ளார். டெப்ட் மார்க்கெட் எனப்படும் கடன் சந்தைகளில் முதலீடுகள் குறித்த 5 ஆண்டுகள் தரவுகள் இல்லை என்றும்,இந்த வகை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார். கார்பரேட் பாண்டுகளுக்கு பதிலாக தங்கப்பத்திரத்தில் மக்களின் கவனம் அதிகளவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கோடக் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள டைனமிக் ஃபண்ட் என்ற பிரிவு தற்போது அரசு பாதுகாப்பு தரும் அளவாக, அதாவது 64 விழுக்காடு பெற்றுள்ளது.
நிப்பான் இந்தியா மற்றும் பந்தன் வங்கிகள் டைனமிக் பான்ட் அளவுகளையும் அரசாங்க பாதுகாப்பு அளவான ஜி.செக் அளவுகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டி வருகின்றன