ஆப்பிளை மிஞ்சிய என்விடியா நிறுவனம்..
உலகின் மதிப்பு மிக்க டெக் நிறுவனம் என்ற பெருமையை இதுவரை பெற்று வந்த ஆப்பிள் நிறுவனத்தை என்விடியா நிறுவனம் வீழ்த்தியுள்ளது. என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.53 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதுவரை 3.52 டிர்ல்லியனாக இருந்ததாக தெரியவந்தது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்கான சிப் தயாரிப்பதால் என்விடியா நிறுவன சிப்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதமும் என்விடியா நிறுவனம், பங்குகள் அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தையும் மிஞ்சியது. 3 நிறுவனங்களின் சந்தை மதிப்பும் மிகவும் குறுகிய அளவிலேயே மாறுபடுவதால், முதல் இடத்தை மூன்று நிறுவனங்களும் மாறி மாறி பிடித்துள்ளன. அக்டோபர் மாதத்தில் சாட் ஜிபிடி நிறுவனம் தனது முதலீட்டில் 6.6 பில்லியன் தொகையை என்விடியாவில் முதலீடு செய்ய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இந்த நிறுவன பங்குகள் கணிசமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில்தான் அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய கான்ட்ராக்ட் சிப் தயாரிப்பாளர்களுக்கும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் என்விடியா நிறுவன பங்குகளின் மதிப்பு அணஅமையில் 54 விழுக்காடு உயர்ந்தது. மெரிக்க பங்குச்சந்தைகளில் இந்த ஓராண்டில் மட்டும் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 190 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் மக்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து அதிகம் தெரிந்துகொண்டதுதான் என்றும் கூறப்படுகிறது.