ஊழியர்களை எச்சரித்த ஓலா நிறுவனம்..
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பவிஷ் அகர்வால், இவர் தனது ஊழியர்களுக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பணி நேரத்தில் வேலையை செய்யாமல் இருக்கும் பணியாளர்களை விளாசியுள்ளார். சுயமரியாதையுடன் இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஓலா நிறுவனத்தில் 500 பேரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரியாக வேலை பார்க்காத சில பணியாளர்கள் குறித்தும் அதில் ஓலா நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். சில பணியாளர்கள் முறையாக ஆபிஸ் வருவதில்லை என்றும் சாடியுள்ளார். வரும் திங்கள் முதல் அலுவலக வருகைப்பதிவேட்டை கண்காணிப்பேன் என்றும் ஓலா தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனது நிறுவன கிளைகளை ஓலா விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனத்துக்கு 800 கிளைகள் உள்ள நிலையில் அதனை 4,000 ஆக உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கிளைகளில் விற்பனையுடன் சர்வீஸ் வசதியும் செய்யப் பட இருப்பதாக பவிஷ் கூறியுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் மட்டுமின்றி பிற ஊர்களிலும் ஓலா நிறுவனம் தனது கிளையை தொடங்க இருப்பதாகவும் பவிஷ் கூறினார். நெட்வொர்க் பார்ட்னர் திட்டம் என்ற திட்டத்தின்படி மேலும் கூடுதலாக 10,000 பேரை தங்கள் நிறுவனத்துடன் இணைக்கும் பணி வரும் ஆண்டு முடிவிற்குள் நடக்கும் என்றும் பவிஷ் கூறியுள்ளார்…