சுசுகியின் முதலாளி மரணம்..
சுசுகி மோட்டார் கார்பரேஷனின் முதலாளியான ஒசாமு சுசுகி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
ஜனரல் மோட்டார்ஸ், போக்ஸ்வாகன், உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோரத்த அவர் அமெரிக்கா, ஐரோப்பியாவில் தனது கார்களை விற்க உதவினார். இந்தியாவில் தற்போது கொடிகட்டி பறக்கும் மாருதி சுசுகி நிறுவனமும் இவர் நினைவில் உதிதித்தது தான். 28 ஆண்டுகளுக்கு மேலாக சுசுகி நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர். அவருக்கு பிறகு தலைவர் பதவியை தனது மகனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அளித்தார். உலகம் முழுவதும் 32லட்சம் கார்களை விற்கும் இந்த நிறுவனம், ஜப்பானின் டொயோடா நிறுவனத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தது. வங்கியில் பணியாற்றிய அவர், தனது பாட்டி கொடுத்த பணத்தில் கார் தயாரிக்கதொடங்கினார்.1958-ல் முதலில் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், சிறிய ரக கார்களை தயாரிப்பதில் 1978-ல் கவனம் செலுத்தினார். அடுத்த ஆண்டே ஆல்டோ என்ற சிறிய காரை ஜப்பானில் உருவாக்கினார். அது ஜப்பானின் சிறிய ரக கார்களுக்கு பெரிய மைல்கல்லாக அமைந்தது. சிறிய கார்களுக்கு வரவேற்பு இல்லாத காலத்தில் பாகிஸ்தான், ஹங்கேரி உள்ளிட்ட இடங்களில் தனது ஆலையை தொடங்கினார். 1982-ல் இவர் இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்களை தேடுவதாக செய்தித்தாளில் படித்த ஒசாமு, இந்தியாவில் மாருதி உத்யோக் நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்கினார். அடுத்தாண்டே மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2021 வரை தலைமை செயல் அதிகாரி பதவியை அவர் வைத்திருந்தார். கால்ஃப் விளையாட்டு இவருக்கு பிடித்தமான ஒன்றாகும். இவருக்கு மொத்தம் 3 பிள்ளைகள்..