உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்கு…
இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமையான ஜனவரி 29 ஆம் தேதி 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 7 விழுக்காடு அளவுக்கு உயர்ந்த பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 2 ஆயிரத்து 826 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 19 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத காலாண்டு முடிவுகள் பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ரீட்டெயில் நிறுவனத்தின் EBItDA மதிப்பு 8 விழுக்காடு உயர்ந்து 62.7 பில்லியன் இந்திய ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வரிகள் கழிந்த பிறகு மிச்ச லாபம் 19 ஆயிரத்து 641 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த காலாண்டைவிட 1.2 விழுக்காடு குறைவு, அதேநேரம் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 10.3 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சந்தை மதிப்பு என்பது 18080 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட அதிகம் கிடைத்திருக்கிறது. இதுவே ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு உயர காரணமாக கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு என்பது ரிலையன்ஸ் குழுமத்துக்கு பலன்தரும் ஆண்டாக இருக்கும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக முதலீடுகள் இருந்ததால் அதன்பலன்கள் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளன. 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவும் ரிலையன்ஸ் குழுமத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் பிரிவு பங்குகளை வாங்கவே நிபுணர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கையில் சிட்டி குழுமம் ரிலையன்ஸ் குழுமத்தை தரம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தை ஜியோ அளித்துள்ளதால் 2910 ரூபாய் டார்கெட் விலையாக வைக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவுக்கு விற்கப்படவில்லை என்றும் சிட்டி தெரிவித்துள்ளது.