டெஸ்லா ஆலை- மகாராஷ்டிரா, தமிழ்நாடு போட்டி..
உலகளவில் பிரபலமான தொழிலதிபராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்,இவர் இந்தியாவில் தனது ஆலையை அமைக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்கினால் அதனை எங்கு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவன முதலீடுகளை ஈர்க்க மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அரசுகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறதாம். இதேபோல் குஜராத் மாநிலமும் இந்த ரேசில் இடம்பிடித்துள்ளதாம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியா மிகப்பெரிய சந்தை வாய்ப்பாக உலகின் பல நாடுகளும் கண்டு வருகின்றன. இந்நிலையில் உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் உள்ளூர் உதிரி பாக உற்பத்தியாளர்களும் டெஸ்லா ஆலையால் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்தால் அதன்பிறகு எவ்வளவு பொருட்கள் உள்ளூர் வணிகர்கள் இடம் வாங்க வேண்டும் என்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அமைவதில் மாற்றுக்கருத்தே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.