பைஜூஸ் வீழ்ந்த கதை…
கேரளாவைச் சேர்ந்த இளம் பொறியாளரான ரவீந்திரன் கடந்த 2015 ஆம் ஆண்டு பைஜூஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். மிகக்குறுகிய காலகட்டத்திலேயே நடிகர் ஷாரூக்கான் மற்றும் கால்பந்து பிரபலமான லியோனல் மெஸ்ஸியை தனது விளம்பர தூதராக பைஜூஸ் நிறுவனம் நியமித்தது. 3பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருந்த அந்நிறுவனம் மிக விரைவாக அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளிலும் தனது செயலியை களமிறக்கியது.
கொரோனா காலத்தில் மிக அசுர வேகத்தில் வளர்ந்த இந்நிறுவனம் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக உயர்ந்தது. பின்னர் அமெரிக்காவில் உள்ள பைஜுஸ் ஆல்ஃபா என்ற நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் அதிகரித்தது. நிதிச்சிக்கலில் சிக்கித்தவிக்கும் பைஜூஸ் நிறுவனம் கொத்துக்கொத்தாக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியதும் பார்க்க முடிந்தது. பைஜுஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ரவீந்திரன் தனது வீடுகளையே விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் பலரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இது போக இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஸ்பான்சராகவும் பைஜூஸ் இருந்தது. அங்கும் பெரிய தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத்தனை நல்ல நிறுவனம் எப்படி வீழ்ந்த்தது என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனை தில லர்னிங் டிராப் என்ற பெயரில் பிரதீப் சாஹா என்ற பத்திரிகையாளர் புத்தகமாக எழுதியுள்ளார். பைஜூஸ் நிறுவனத்தில் பணியாற்றி, தூக்கி வீசப்பட்ட பணியாளர்களிடம் பேசிய ஒரு புத்தக தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பணியாளர்கள் கூறும்போது, விற்பனை பிரதிநிதிகள் ஒருநாளில் அதிகபட்சமாக 14 மணி நேரம் கூட வேலைவாங்கப்பட்டதாக உருக்கமாக தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் பைஜூஸின் பொருட்கள் விற்கப்படாமல் வீழ்ச்சி தொடங்கியிருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான விசாரணைக்கும் பைஜுஸ் நிறுவனம் உட்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்குக் கூட ஏராளமான இளைஞர்கள் தயார் படுத்த பைஜூஸ் உதவிய நிலையில், போதிய நிர்வாக திறமையில்லாமல் அந்த நிறுவனம் துவங்கிய வேகத்தில் சரிந்துவிட்டது. மிகக்குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்ட பைஜூஸ் நிறுவனம், எழுந்த வேகத்தில் வீழ்ந்தது என்றே சொல்ல வேண்டும்.