22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அமெரிக்க பணவீக்க நிலவரம் என்ன?

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் பயணங்கள் சார்ந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து 0.3%ஆகஸ்ட்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு உயர்வாகும். வாடிக்கையாளர் விலை குறியீடு எனப்படும் சிபிஐ 2.1%அதிகரித்துள்ளது. பணவீக்க தரவுகள் வந்துள்ள போதிலும் அடுத்தவாரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை குறைப்பதில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரை புள்ளி வரை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புகளால் அமெரிக்காவில் பங்குச்சந்தையிலும், டாலர் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீடான சிபிஐ உயர்ந்தால் விமானக் கட்டணம், துணிகள், தினசரி உபயோக பொருட்கள் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆகியன அமெரிக்காவில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது அமெரிக்க மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. பணவீக்கத்தை கவனிக்கும் அதே நேரம் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் தனி கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் அளவு 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக்குறைந்த ஆட்களே புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேலைக்கு புதிதாக ஆட்களை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக உள்ளதாகவும் பல நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதே நேரம் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டையும் கண்காணித்து வருவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *