35விழுக்காடு ஜிஎஸ்டி வேண்டாமே..
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமலானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் 35%ஜிஎஸ்டி வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த வரி விதிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று இந்திய வணிகர்கள் கூட்டமைப்பான இந்திய செல்லர்ஸ் கலக்டிவ் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. நிதியமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகியோர் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கூறியுள்ளனர். மதுவகைகள், சிகரெட், புகையிலைப்பொருட்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும்அவர்கள் கூறியுள்ளனர். வரும் 21 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்நடக்க உள்ளது. வணிகர்களுக்கு கிடைக்கும் கமிஷன் தொகை பாதிக்கப்படும் என்றும், சீனப் பொருட்களின் ஊடுருவல் அதிகரிக்கும் என்றும் வணிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மதுபான வகைகளுக்கு 35 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால் கள்ளச்சந்தை உருவாகும் என்றும் , சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்வணிக நிறுவனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வணிகர்கள் கூறியுள்ளனர்.