சிபில் அறிக்கை துரிதமாகிறது..
கடன் வாங்குவோரின் விவரங்களை சேகரித்து வைக்கும் பணியில் சிபில் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கடன் தரலாமா வேண்டாமா என வங்கிகள் முடிவுக்கு வரும். இந்நிலையில் அண்மையில் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு நிறுவனங்களை இன்னும் வேகமாகசெயல்பட வைத்திருக்கிறது. அதாவது கிரிடிட் தகவல்களை இனி சிபில் அமைப்பு மாதத்துக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். சரியான நேரத்தில் தகவல்களை பகிர்ந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று சக்தி காந்த தாஸ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 15 நாட்களில் தகவல் மத்திய அரசுக்கு கிடைத்தால் அதன் அடிப்படையில் கடன் வாங்கியவருக்கு கூடுதல் புள்ளிகள் சரியான நேரத்தில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதியால், கடன் தருபவருக்கும், கடன் பெறுபவருக்கும் கூடுதல் நம்பிக்கை கிடைக்கும் என்றும் சமீபத்திய தரவுகள் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிபில் ஸ்கோரில் உள்ள பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வுகள் கிடைக்கும் என்றும் மற்றொரு நிபுணர் தெரிவிக்கிறார். விரைவாக ரிப்போர்ட் அளிக்கும் அதே நேரம், ரிசல்ட்டில் எந்த தரக்குறைவும் ஏற்படக்கூடாது என்பதும் மற்றொரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் கடன் தரும் நிறுவனம் தங்கள் மென்பொருளில் பல இடங்களில் பூர்த்தி செய்யாமல் விட்டு விடுகின்றனர். இந்த நிலையில் புதிய அறிவிப்பின்படி, துல்லியம் மிகவும் முக்கியம் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.